For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்ஸ்ட்ராங்கின் உடையை பாதுகாக்க 3 கோடி தேவையாம் - நிதி திரட்டும் அமெரிக்க மியூசியம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிலாவில் முதன் முறையாக கால்பதித்த விண்வெளி வீரரான ஆம்ஸ்ட்ராங்கின் விண்வெளி உடையை பாதுகாக்க நிதி திரட்டும் திட்டத்தை அமெரிக்க காட்சியகம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த "நாசா" விண்வெளி மைய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனுக்கு பயணமானார். அங்கு முதன் முதலில் கால் பதித்து அமெரிக்க கொடியை நாட்டி னர்.

Campaign begins to preserve Neil Armstrong's spacesuit

இச்சம்பவம் கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நடந்தது. அவர் சந்திரனில் இறங்கி கால்பதித்த 46வது ஆண்டு விழா அமெரிக்காவில் நேற்று கொண்டாடப் பட்டது.

சந்திரனுக்கு சென்ற போது அவர் அணிந்திருந்த விண்வெளி உடை அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள நேசனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் அருங்காட்சியகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த உடையை குறைந்த காலமே பாதுகாக்க முடியும். விசேஷமாக தயாரிக் கப்பட்ட அதன் நூலிழைகள் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்காமல் சிதைந்து விடும். தற்போது, நீல் ஆம்ஸ்ட் ராங்கின் விண்வெளி ஆடைக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே, அதை பாது காக்க அருங்காட்சியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ரூபாய் 3 கோடியே 25 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக நிதியை திரட்டும் பணியை மேற் கொண்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் விண்வெளி உடையை பாதுகாக்கும் தட்பவெப்பநிலையுடன் கூடிய ஷோ கேஸ்தயாரிக்கப்பட உள்ளது. விண்வெளி உடையை அதில் வைத்து பாதுகாக்க நாசா முடிவு செய்துள்ளது.

English summary
A fundraising campaign has been launched to preserve the spacesuit that Neil Armstrong wore when he became the first person to walk on the Moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X