For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே நகர் வேட்பு மனு தாக்கலுக்கு சட்டையில்லாமல் வந்தவர்.. ஹெட்செட்டில் பாட்டு கேட்ட விசித்திரம்!

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு நபர் சட்டையில்லாமல் வந்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு நபர் சட்டையில்லாமல் வந்துள்ளார். ஜெயராமன் என்ற இந்த நபர் சட்டையில்லாமல் வந்ததோடு அங்கு இருந்த போலீசோடு வாக்கு வாதமும் செய்துள்ளார்.

போலீசார் இவரை சமாதானப்படுத்த நீண்ட நேரமாக மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டனர். இவர் சட்டையில்லாமல் வந்ததோடு நிறைய கேலிக்குரிய வேலைகளும் செய்து இருக்கிறார்.

இவரால் அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மற்ற நபர்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளானர்கள். மேலும் அங்கு இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே நகர் வேட்புமனு தாக்கல்

ஆர்.கே நகர் வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 27ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று என்று கூறப்பட்டது. இதுவரை நிறைய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 5க்கும் அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விசித்திரம்

விசித்திரம்

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சோழிங்கநல்லூரை சேர்ந்த ஜெயராமன் என்ற நபர் வந்திருந்தார். அவர் மிகவும் வித்தியாசமாக செயல்பட்டார். மேலாடை அணியாமல் இருந்தார். மேலும் லுங்கி அணிந்து பனியன் வேறு போட்டு இருந்தார். மேலும் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

போலீசுடன் தகராறு

போலீசுடன் தகராறு

இந்த நிலையில் அவரின் விசித்திரமான தோற்றம் காரணமாக போலீசார் அவரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசாருடன் அவர் தகராறு செய்தார். பின் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து சென்றனர். மேலும் போலீசார் அவருக்கு புதிய சட்டை வாங்கி கொடுத்து மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வந்தனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

அவர் ஏன் அப்படி சட்டை அணியாமல் விசித்திர கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன் என்றும் கூறியுள்ளார். அதில் ‘நான் விவசாயம் செய்கிறேன். விவசாயிகள் இப்படித்தான் இருப்பார்கள். விவசாயிகளின் நலனை காக்க அவர்கள் சார்பாக போட்டியிட உள்ளேன்'' என்று குறிப்பிட்டார். மேலும் மக்களிடம் எளிதாக சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் இப்படி செய்ததாக குறிப்பிட்டார்.

English summary
Candidate named Jayaraman came without shirt for RK nager election file nomination. Police took away him and give him a new shirt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X