For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்துப் போன கோகுல இந்திரா.. வெளுத்தெடுக்கும் வெயில்.. திக்கித் திணறும் வேட்பாளர்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக அடித்து வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

90 சதவீத வேட்பாளர்கள் கருத்துப் போய் வெளிறிக் காணப்படுகின்றனர். அந்த அளவுக்கு வெயில் வெளுத்து வருகிறது "கலர் கலராக" உள்ளவர்கள் எல்லாம் கருகருவென மாறிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வெயில் கொளுத்துகிறது. இதனால் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாமல் திணறுகின்றனர்.

கருத்துப் போன கோகுல இந்திரா

கருத்துப் போன கோகுல இந்திரா

அமைச்சர் கோகுல இந்திரா எப்போதுமே பளிச்சென காணப்படுவார். ஆனால் சென்னை அண்ணா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவரை இப்போது பார்க்கும்போது அடடா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கருத்துப் போய்க் காணப்படுகிறார். காரணம் வெயில்.

எந்தளவுக்கு மழையோ அந்தளவுக்கு இப்போ வெயில்

எந்தளவுக்கு மழையோ அந்தளவுக்கு இப்போ வெயில்

வெப்ப பிரசேதமான நெல்லை, தூத்துக்குடியில் கடந்தாண்டு எவ்வளவு மழை பெய்ததோ அதே அளவுக்கு தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஓரு வார காலமாக 104 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது.

வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம்

வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம்

இதில் திமுக, அதிமுக பிரச்சார பட்டியலில் தயாரித்து வைத்திருப்பதால் அதற்கு ஏற்ப பிரச்சார பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வெயில் காரணமாக சில பகுதிகளுக்கு முழுமையாக செல்ல முடியாமல் வாகனத்தில் நின்று கொண்டே பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காலை 6 மணிக்கே ஓடு.. !

காலை 6 மணிக்கே ஓடு.. !

சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் காலை 6 மணிக்கே பிரச்சாரத்திற்கு கிளம்பி விடுகின்றனர். 9 மணிக்கெல்லாம் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திரும்பி வடுகின்றனர்.

அதோ ஒரு மரம்.. ஒதுங்கு ஒதுங்கு!

அதோ ஒரு மரம்.. ஒதுங்கு ஒதுங்கு!

இதில் கிராமப்புறங்களில் மைக் பிடித்து செல்லும் பேச்சாளர்கள் எங்காவது மர நிழல் தெரிந்தால் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க தொடங்கி விடுகின்றனர்.

6 மணிக்கு மேலதான் ஆட்டோ ஓடும்!

6 மணிக்கு மேலதான் ஆட்டோ ஓடும்!

இதனால் முக்கிய பேச்சாளர்கள், சில நடிகர்கள் கூட மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரத்தை வைத்து கொள்ளலாமே என கோரிக்கை வைக்கின்றனர். வெயில் கொடுமையால் வேட்பாளர்கள் செலவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போ்ட்டியிடும் வேட்பாளர் விழி பிதுங்கி் போய் வருகின்றனர்.

என்ன பண்றது வேட்பாளர்களே.. இந்த வெயிலில்தான் மக்கள் தினசரி பிழைப்பை நடத்தி வருகின்றனர்.. நீங்களும் கொஞ்சம் அலைஞ்சுதான் பாருங்களேன்..!

English summary
Candidates all over the state are struggle to manage the scorching sun and campaigners prefer to meet the people in the early morning and evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X