For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்க முடியாது.. பொன்முடி கேள்விக்கு அமைச்சர் சம்பத் திட்டவட்ட பதில்

ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க முடியாது என்று அமைச்சர் சம்பத் சட்டசபையில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க முடியாது என்று தொழிற்துறை அமைச்சர் சம்பத் திட்டவட்டமாக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ பொன்முடி ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

Cannot fix Sugarcane price Rs.3500 per ton, Minister Sampath says

இதற்கு பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் சம்பத், ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத் தொகை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சம்பத் கூறினார்.

இதுகுறித்து அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Cannot fix Rs 3500 per ton of sugarcane, said Minister Sampath in assembly today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X