For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா, வெங்கட்ராமன், சாந்தா பணியாற்ற தடை கோரி வழக்கு

தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் வெங்கட்ராமன், சாந்தா உள்ளிட்டோரும் ஆலோசகராக பணியாற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தமிழகத்தில் 41வது தலைமைச் செயலாளராக கேரளத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் 1976ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அவரை அரசு ஆலோசகராக நியமித்தார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவிற்கு பிடித்த அதிகாரியாக இருந்தார் ஷீலா பாலகிருஷ்ணன். இந்த நிலையில் தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்ற தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல் வெங்கட்ராமன், சாந்தா உள்ளிட்டோரும் ஆலோசகராக பணியாற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Case file against adviser Sheela Balakrishnan

1983இல் அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரால் சமூக நலத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், 2000இல் திமுக ஆட்சியிலும் சமூக நலத்துறை செயலாளர் பதவியை வகித்தார்.

ஆனால், அரசியல்ரீதியாக ஆராயத்தக்க மாற்றம் 2002லேயே நிகழ்ந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோது அரசு தரப்பில் நம்பத்தகுந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

2006இல் திமுக ஆட்சியின்போது கல்வி நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக்கப்பட்டு வெளிச்சத்திலிருந்து ஒதுக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தபோது ஷீலாவின் கணவரும் அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணன் அந்தப் பதவிக்குத் தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்டபோது அவரது மனைவியான ஷீலாவே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மார்ச் மாதம் அவர் ஓய்வு பெற்றபின் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து ஆலோசகராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A PIL filed against adviser Sheela Balakrishnan. The government has retained the services of Ms. Sheela Balakrishnan, who was in March 2014 appointed as adviser to the Government following her superannuation as Chief Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X