For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சையில் சிக்கிய கூகுள்.. மேப்பால் வந்த பிரச்சனை.. பாய்கிறது வழக்கு!

கூகுள் மீது கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் மீது கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் இருப்பிடத்தை ஆராய்வதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள்தான் இதுவரை பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தது. ஆனால் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

கூகுளில் மேப்பில் இருக்கும் அம்சம் ஒன்று, அந்த நிறுவனத்தை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது. மக்களின் இருப்பிடத்தை அனுமதி இல்லாமல் ஆராய்வதாக புகார் எழுந்துள்ளது.

மேப் எப்படி இயங்குகிறது

மேப் எப்படி இயங்குகிறது

கூகுள் மேப் என்பது , நம்முடைய ஆண்டிராய்டு, ஆப்பிள் போன்களில் உள்ள ஜிபிஎஸ் உதவியுடன் இயங்க கூடியது. இந்த ஜிபிஎஸ் தான் நம்முடைய இருப்பிடத்தை செயற்கைகோள் உதவியுடன் கண்டுபிடிக்கும். இதை வைத்து மேப் உதவியுடன் நாம் வெவ்வேறு இடங்களுக்கு செல்வது, டாக்சி புக் செய்வது என நிறைய பணிகளை செய்யலாம்.

மாற்றிக்கொள்ளலாம்

மாற்றிக்கொள்ளலாம்

இதை ஆப் செய்தும் வைக்க முடியும். அதாவது நம்முடைய போனில், கூகுள் லொகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்ஷனை நிறுத்தி வைத்தால், கூகுளால் நாம் செல்லும் இடங்களை கண்டுபிடிக்க முடியாது. கூகுளுக்கு நாம் எங்கே செல்கிறோம் என்ற விவரம் எதுவும் தெரியாது.

தவறு செய்துவிட்டார்கள்

தவறு செய்துவிட்டார்கள்

ஆனால் கூகுள் இங்குதான் தவறு ஒன்றை செய்துள்ளது. அதாவது இந்த லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திய பின்பும் கூட கூகுள் மக்களின் இடங்களை கண்காணித்து உள்ளது. தொடர்ந்து மக்களின் விவரங்களை சேகரித்து வந்துள்ளது. நாம் எங்கே எல்லாம் செல்கிறோம் என்று நம்முடைய அனுமதி இல்லாமலே கண்காணித்து வந்துள்ளது.

வழக்கு தொடுத்தனர்

வழக்கு தொடுத்தனர்

அசோசியேட் பிரஸ் என்ற ஏஜென்சி சில நாட்களுக்கு முன் இதை பற்றி அறிக்கையை வெளியிட்டனர். இதன் நிலையில் தற்போது கூகுள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு, வழக்கு தொடுத்துள்ளனர்.

English summary
Case filed against Google for privacy scandal. Google has followed people even when they turned off their location history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X