For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் "பளார் பளார்"... தலைமை ஆசிரியை மீது வழக்கு

கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் அறை விட்ட தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு பள்ளியில் கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் தலைமை ஆசிரியர் அறைந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தானேவில் மிரா சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு கடந்த 22-ஆம் தேதி காலை இறை வணக்கம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் (11). இவர் கொட்டாவி விட்டதாக கூறப்படுகிறது.

Case filed against school HM for beating 6th std boy for yawning

இதை தலைமை ஆசிரியை பார்த்து விட்டார். உடனே அந்த சிறுவனை அழைத்து இறை வணக்கத்தின் போது இதுபோல் செய்யலாமா என கேட்டு கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை, தலைமை ஆசிரியையை சந்தித்து கேட்டார். அதற்கு அவரோ இதுபோல் மாணவர்கள் குறும்பு செய்தால் அவர்களை நாங்கள் தண்டிப்போம் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியை இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
A Thane school headmistress slaps 11 year old boy for yawning in the class. The boy's father files case against School HM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X