For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை நீக்கக் கோரி வழக்கு... அரசுக்கு மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் நோட்டீஸ்

By Shankar
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கருணாநிதி என்ற தி.மு.க. வழக்கறிஞர் வழக்கத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

Case filed to remove Jayalalithaa pics from govt offices

அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் பெயர் எஸ் கருணாநிதி. மதுரை கோ புதூரைச் சேர்ந்தவர்.

மதுரை வக்கீல்கள் சங்க துணைச்செயலாளரான இவர், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல் அமைச்சர், டாக்டர் அம்பேத்கார், காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜகோபால் ஆச்சாரி, தந்தை பெரியார், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவப் படங்களை மட்டும் அரசு அலுவலகங்களில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்குப் புறம்பாக அரசு அலுவலங்களில் ஜெயலலிதா உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உருவப் படங்களை அரசு அலுவலங்களில் வைத்திருப்பது நியாயமற்றது.

அரசு அலுவலகங்களில் யார், யார் உருவப் படங்களை வைக்கலாம் என்பது தொடர்பான அரசின் உத்தரவை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புப் பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்கள் உள்ளன. அரசுத் திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்க வேண்டும் என்றும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்றும் 31-10-2014 அன்று தமிழக தலைமை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அரசு திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்கவும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

English summary
A Madurai based advocate has filed petition in Madurai High Court branch to remove all pictures of Jayalalithaa from Govt offices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X