For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா?- வீடியோ

    கரூர் : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலித் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான வரும் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கன்னத்தில் தட்டியதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    Case on SV Shekher at Karur Court

    இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்தை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வந்த நிலையில், கரூர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் என்பவர் எஸ்.வி சேகர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    English summary
    Case on SV Shekher at Karur Court. Earlier SV Shekher uttered a bad comment on Women Journalists which made ruckles over Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X