For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசங்க காப்பி அடிச்சா டீச்சர் கிட்ட சொல்லலாம்….. டீச்சரே காப்பியடிச்சாஆஆ.....

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: அரசு தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகி வரும் நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெற்று கடந்த மாதம் அதன் முடிவுகள் வெளியானது. நன்றாக தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறாமலும், முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Cases has been filed on hundred Polytechnic Lecturers whom involved in Exam Scam.

இதுகுறித்த புகார்களை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 1058 பேருக்கான தேர்வு முடிவில் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தனர்.
எழுதிய விடைகளுக்கு அதிகமாக மார்க் போடுவது, விடைத்தாளை மாற்றுவது உள்ளிட்ட வகைகளில் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

விரிவுரையாளர்கள், பேப்பரை திருத்தியவர்கள், தேர்வு ஆணைய ஊழியர்கள் உள்ளிட்ட நூறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Cases has been filed on hundred Polytechnic Lecturers whom involved in Exam Scam. Chennai crime branch has started the investigation regarding the scam and expect to arrest the culprits soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X