For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஓட்டுக்கு ரூ5000? ஆ. ராசா உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு!

By Mayura Akilan
|

திருப்பூர்: லோக்சபா தேர்தலில் தனக்கு சாதகமாக வாக்களிக்க ஒரு ஓட்டுக்கு ரூ.5000 கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்பட 50 பேர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தேவராயன்பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக திருமுருகன்பூண்டி பஞ்சாயத்து துணை தலைவர் விஸ்வநாதன் புகார் அளித்தார்.

Cash for vote: Tirupur police case file against A.Raja

இந்த புகாரில், கடந்த 24ஆம் தேதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதியில், நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தேவராயன்பாளையம் பள்ளிவாசல் சாலையில் வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதை தடுக்க வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் சின்னதம்பி, முகமது இப்ராகிம் ஆகியோரை கீழே தள்ளிவிட்டு மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட திருப்பூர் அனுப்பப்பாளையம் காவல்துறையினர், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, அவிநாசி தி.மு.க ஒன்றிய செயலாளர் சாமிநாதன், திருமுருகன்பூண்டி தி.மு.க நகர செயலாளர் குமார்உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகா ஆ.ராசா தரப்பில் கேட்டபோது, "தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை மக்கள் முன்நிறுத்தி ஓட்டு கேட்டோம். வாக்காளர்களுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை. இது பொய் புகார்" என்றனர்.

English summary
Tirumurugan Poondi panchayath leader Visvanatha complaint against DMK former minister and Nilgiris candidate A.Raja for giving money for vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X