For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தியேட்டரில் பல்க் டிக்கெட், பேடிஎம்மில் பணம்.. ஆர்.கே.நகரில் டிசைன் டிசைனாக பண வினியோகம்

ஆர்கே நகரில் பல விதங்களில் பணவிநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாக்காளருக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: ராதாகிருஷ்ணன் நகரில் இறுதி கட்ட ஓட்டு வேட்டையாக வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் பண விநியோகம் செய்யப்படுவதாகவும், பேடிஎம்மில் பணம் டெபாசிட் என பல விதங்களில் பண விநியோகம் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் கடந்த முறையை மிஞ்சும் வகையில் பணப்பட்டுவாடா காட்சிகள் தூள் பறக்கின்றன. கடந்த முறையாவது ஆவணங்கள் அடிப்படையில் பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை கண்முன்னே கட்டுக்கட்டாக புது ரூபாய் நோட்டுகள் விநியோகம் படு ஜோராக நடக்கிறது.

cash for voters, pay tm deposit and so on RK nagar money distribution ways.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சராசரியாக 50 பேர் நியமிக்கப்பட்டு பண விநியோகம் செய்ய அசைன்மெண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சமான 50 வாக்காளர்களுக்கு பணம் தர வேண்டும் என்பது தான் அந்தக் கட்சிக்காரருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டார்கெட்.

ஒரு வாக்காளருக்கு ரூ. 6 ஆயிரம் என்ற ரீதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும் பேடிஎம் வசதி வைத்திருப்போருக்கு அவர்களின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வாக்காளர்களைத் தேடிச் சென்று அவர்களின் உறவினர்களின் வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி அதில் பணம் போடுவதாக சில வேட்பாளர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சினிமா தியேட்டர்களுக்கு வரவழைத்து 200 டிக்கெட்டுகளை பல்க்காக புக் செய்து திரையரங்கில் வைத்து பண விநியோகம் நடப்பதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
Money distribution by means of cash, Pay TM deposit and cash deposit in relatives accounts DMK accusses the ruling party for this activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X