For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிபன்பாக்சில் ஓட்டுக்கு பணம்… சென்னையில் 3 பேர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ்ரோடு, பச்சையம்மாள் தெருவில் உள்ள ஒரு வீட்டில், டிபன்பாக்சுக்குள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து, வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதாக, அந்த பகுதி அ.தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சென்று, அங்கு சோதனை போட்டனர். சோதனையில் குறிப்பிட்ட வீட்டில் இருந்து, 60 டிபன்பாக்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சிவபாஸ்கர் மேற்பார்வையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுளா, வெங்கடரத்தினம், சரவணகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்

தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சென்னை மேயர் சைதை துரைசாமியும் உடனிருந்தார். மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றிக்காக இந்த பணம் கொடுக்கப்படுவதாக அதிமுகவினர் புகார் அளித்தனர்.

தயாநிதி மாறன் மீது நடவடிக்கை

ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

English summary
The AIADMK on Wednesday lodged a complaint with the returning officer alleging that the rival DMK functionaries were distributing stainless steel tiffin-boxes with currency notes inside them to the voters of Central Chennai. High-profile former Union minister Dayanidhi Maran is the DMK candidate in this constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X