For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு.. கருத்து சொன்னார் ரஜினிகாந்த்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ

    சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. முன்பு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை விட இது குறைவானது என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    Cauvery verdict is affecting Tamil Nadu farmers, says actor Rajinikanth

    இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து கூறுகையில், இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடாமல், கிடைத்துள்ள தண்ணீரை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அழுத்தமாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    ரஜினிகாந்த் இதுபற்றி கருத்து தெரிவிக்காத நிலையில், சமூக வலைத்தளங்களில் அதுபற்றி சரமாரியாக கேள்வி எழுந்தது. இந்த நிலையில் டிவிட்டரில் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: "காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

    English summary
    The final verdict of the Supreme Court over Cauvery Water Distribution is affecting Tamil Nadu farmers, says actor Rajinikanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X