For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் வெள்ளம் வந்து என்ன பயன்.. கடைமடைக்கு தண்ணீர் வராது.. விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, தமிழகத்தில் கடைமடைக்கு நீர் வருவது என்பது சந்தேகம்தான் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர்வரத்து... 1000 கனஅடி நீர் வெளியேற்றம்!

    சென்னை: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, தமிழகத்தில் கடைமடைக்கு நீர் வருவது என்பது சந்தேகம்தான் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்று காலை மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.

    ஆனால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வராது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட திருச்சியை தாண்டி கடைமடை பகுதிகளுக்கு வர வாய்ப்பில்லை

    58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி!58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி!

    எங்கு

    எங்கு

    முழுவதாக மேட்டூர் அணை நிரம்பி, முழுவதுமாக வெளியேற்றப்பட்டாலும் கூட காவிரி தண்ணீர் கடைமடைக்கு வராது. தலைஞாயிறு, பஞ்சநதிக்குளம், நாலாம் சேத்தி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு வர வாய்ப்பு, என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிய கவலைக்கு உள்ளாகி உள்ளனர்

    எவ்வளவு

    எவ்வளவு

    பொதுவாக காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு திருச்சி வழியாக முக்கொம்பு வரும். பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்திற்கும் செல்லும். கல்லணைக்கு செல்லும் தண்ணீர்தான் கடைமடைக்கு வரும்.

     ஏன் இல்லை

    ஏன் இல்லை

    ஆனால் எப்போதும் போல கல்லணையில் இந்த முறையும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல் முக்கொம்பு அணை கட்டுமானம் இன்னும் முடியவில்லை. அங்கு காப்பானை கட்டுமானமும் முடியவில்லை.

    கடலில் கலக்கும்

    கடலில் கலக்கும்

    இதனால் பெரும்பாலான அளவு நீர் கடலில் கலந்து வீணாகும். கல்லணையில் இருந்து மிக மிக குறைவான அளவில்தான் கடைமடை நோக்கி தண்ணீர் செல்லும், என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சென்ற முறையும் தமிழக அரசு காவிரியில் வெள்ளம் வந்தும் இதே தவறைத்தான் செய்தது. இந்த முறையும் இதே தவறைத்தான் அரசு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cauvery water won't reach its final point in Kadamadai says, Tamilnadu Farmers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X