For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கிருந்தார் என்றே தெரியலை.. யாராவது மிரட்டியிருக்கலாம்.. வக்கீல்

நிர்மலாதேவிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கிருந்தார் என்றே தெரியலை - வக்கீல்

    அருப்புக்கோட்டை: "ஒரு வாரமாகவே நிர்மலாதேவி எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை.. ஒருவேளை அவரை யாராவது மிரட்டியிருக்கலாம்" என்று நிர்மலாதேவி வக்கீல் பசும்பொன் பாண்டியன் இன்று கோர்ட்டில் தெரிவித்தார்... எனினும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து ஆஜர்படுத்தியதுடன், திரும்பவும் மதுரை ஜெயிலிலும் அடைத்தனர்.

    கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றது சம்பந்தமாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளில் நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் சிறை சென்ற நிர்மலாதேவி உட்பட 3 பேருமே இப்போது ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால், இது சம்பந்தமான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது.

    இன்னும் எத்தனை பேர் வேணும்.. ஏன் துரோகம் பண்றே.. ஆஷாவின் ஆவேசம்.. எரிக்கப்பட்ட கான்ஸ்டபிள்! இன்னும் எத்தனை பேர் வேணும்.. ஏன் துரோகம் பண்றே.. ஆஷாவின் ஆவேசம்.. எரிக்கப்பட்ட கான்ஸ்டபிள்!

    கருப்பசாமி

    கருப்பசாமி

    அந்த வகையில், நவம்பர் 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் போன மாசமே கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. மேலும் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் என்றும் அப்போது நீதிமன்றம் தெரிவித்தது.

    வக்கீல்

    வக்கீல்

    இந்நிலையில், முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரான நிலையில், நிர்மலா தேவி மட்டும் அன்றைய தினம் ஆஜராகவில்லை. பேராசிரியை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் பசும்பொன் கோர்ட்டில் தெரிவித்தார்.

    ஆஜராகவில்லை

    ஆஜராகவில்லை

    மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதனால்தான் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும் வக்கீல் தெரிவித்தார். ஆனால் இதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டும், நிர்மலாதேவி இந்த முறையும் ஆஜராகாததால் இந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    15 நாள் காவல்

    15 நாள் காவல்

    இதனிடையே நிர்மலாதேவி தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அவர் வீடு திரும்பிய நிலையில், இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் நீதிபதி பரிமளா, நிர்மலா தேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நிர்மலா தேவி மதுரை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சந்தேகம்

    சந்தேகம்

    நிர்மலாதேவி சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் பசும்பொன் பாண்டியன் சொல்லும்போது, "போன ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை.. ஒருவேளை அவரை யாராவது மிரட்டியிருக்கலாம். அதனாலேயே அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்" என்றார்.

    English summary
    professor Nirmala Devi arrested taken 15 days judicial custody in madurai central jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X