For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்மலாதேவி விவகாரம்: பல்கலை. மாணவிகள், முன்னாள் பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை காமராஜர் பல்கலை.முன்னாள் பதிவாளர் விஜயனிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாத்தூர் கோர்ட்டில் நிர்மலா தேவியை ஆஜர்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்

    மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக பல்கலை மாணவர்கள் மற்றும் முன்னாள் பதிவாளர் விஜயன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் உரையாடியதற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராயச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    CBCID Inquiry to Kamaras University students

    இந்நிலையில், பேராசிரியர் நிர்மலாதேவி தொலைபேசியில் பேசிய மாணவ, மாணவியரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அதேபோல, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் விஜயனிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி செல்லும்நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Madurai Kamarasar University Assistant Professor Murugan and Student Karuppasamy revealed. In the meanwhile, Professor Nirmaladevi spoke to the students who spoke on the phone today. Similarly, CBCID officials also investigated the former Registrar of Madurai Kamaraj University Vijayan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X