For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காண்ட்ராக்டர் சுப்பிரமணி தற்கொலை வழக்கில் 8 பேருக்கு சம்மன்... சிபிசிஐடி போலீஸ் அதிரடி - வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் காண்ட் ரக்டர் சுப்பிரமணி தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் 8 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சிபிசிஐடி போலீசார் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், 8 பேருக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

கான்ட்ரக்டர் சுப்பிரமணி கடந்த மே 8ஆம் தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

CBCID police send summon to 8 members in contractor Subramaniam suicidal case

ஆனால், திடீரென இளங்கோ மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) செந்தில், இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் 8 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியின் மனைவி சாந்தி, தோட்டக்காரர் பாப்பம்மாள், பெருமாள், வடிவேல் மற்றும் சுப்பிரமணியம் கடிதத்தில் குறிப்பிட்ட வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கம் உள்ளிட்ட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளது.

English summary
Tamilnadu CBCID police send summon to 8 members including IT officer Karthick Manickam in contractor Subramani suicidal case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X