For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் பட்டப்பகலில் அம்மனின் தாலி, மூக்குத்தி திருட்டு: பொதுமக்கள் அதிர்ச்சி

கோவையில் அம்மனின் தாலி மற்றும் மூக்குத்தி திருடி சென்றுவிட்டனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் பட்ட பகலில் அம்மனின் தாலி மற்றும் மூக்குத்தியை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

Cbe Theft

இந்நிலையில், சாமி தரிசனத்திற்காக காலையில் நடை திறக்கப்பட்டு வைத்திருந்தது. இதனையடுத்து அர்ச்சகர் வெளியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு பூஜைக்காக சென்றிந்தார். அப்போது அங்கு சாமி தரிசனம் செய்வதுபோல் இரண்டு நபர்கள் கோயிலுக்குள் வந்ததாக தெரிகிறது.

அவர்கள் உள்ளே சென்று அம்மனின் கழுத்தில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள தாலி மற்றும் மூக்குத்தியை திருடி சென்றுவிட்டனர். பூஜையை முடித்து வந்த அர்ச்சகர் உள்ளே வந்து பார்த்தபோது தாலியும், மூக்குத்தியும் திருடு போயிருந்தது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த பீளமேடு புலனாய்வு காவல்துறையினர் இந்த திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர். பட்ட பகலில் அம்மனின் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The incident happened in Coimbatore by the mysterious strangers of Amman's jewelery. When the priest came out of the temple, two men entered the temple and stole the 50 thousand worth of jewells of the Amman. The police are investigating this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X