For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுவை மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு செய்ததாக புதுவை ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை ஏற்று சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருந்தார்.

CBI books Centac chairman in medical admission row

இவ்விசாரணையின் முடிவில் புதுவை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் தலைவர் நரேந்திர குமார், புதுவை சுகாதாரத்துறை செயலாளர் பி.ஆர். பாபு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புதுவை சுகாதாரத்துறைகள் இயக்குநர் டாக்டர் ராமன், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், இணை ஒருங்கிணைபாளர் பஜனிரட்ஜா, ராஜகோபால் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே சென்டாக் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சில அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

English summary
The Central Bureau of Investigation (CBI) has registered an FIR against Puducherry Centralised Admission Committee (Centac) chairman Narendra Kumar along with 12 others in the medical admission row. Those named as accused include two IAS officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X