For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்து குவிப்பு: வருமானவரி ஆணையர் விஜயலட்சுமி மீது சிபிஐ வழக்கு

வருமானவரித்துறை ஆணையர் விஜயலட்சுமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை வருமான வரி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

ஊழல்களுக்கு துணை போனதாக டெல்லி வருமான வரித்துறையின் முதன்மை ஆணையாளர் எஸ்.கே.மிட்டல் உள்பட 9 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் 3 தனிநபர்கள் மீது கடந்த ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. முன்னதாக சென்னை, டெல்லி உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.

CBI files DA case against IT Commissioner Vijayalaxmi

இதில் சென்னை வருமான வரித்துறை ஆணையர் விஜயலட்சுமியும் ஒருவர். தற்போது விஜயலட்சுமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரது கணவரும் ரயில்வே துறையில் பணியாற்றியவருமான சுரேஷ் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English summary
CBI filed FIR against Income Tax commissioner Vijaya Laxmi and her husband Suresh for disproportionate assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X