For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்கா ஊழல் வழக்கு சூடு பிடிக்கிறது.. உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டது குறித்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் இன்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக திமுக குற்றச்சாட்டை முன்வைத்தது.

CBI probe at Tamilnadu Food Safety Department office on Gutka Scam

அது தொடர்பாக தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து திமுக சட்டசபை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் குறித்தும், அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் குறித்தும் இன்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
CBI probe at Tamilnadu Food Safety Department office on Gutka Scam. Earlier Chennai HC ordered for CBI probe on Gutka scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X