For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆக்செல் சன்ஷைன் சிவசங்கரன் மீது ரூ.600 கோடி வங்கி மோசடி புகார்.. சிபிஐ அதிரடி சோதனை

ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரன் மீது 600 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரன் மீது 600 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன். இவரக்கு ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளராக உள்ளார்.

இவர் ஐடிபிஐ வங்கியில் 600 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சிவசங்கரனுக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

8 மணி நேரம் சோதனை

8 மணி நேரம் சோதனை

சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவசங்கரனின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 8 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நிறுவனங்கள்

இரண்டு நிறுவனங்கள்

ஆக்செல் சன்ஷைன் நிறுவனம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வின்விண்ட் ஒய் என்ற நிறுவனம் பின்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014ல் ஐடிபிஐயில் கடன்

2014ல் ஐடிபிஐயில் கடன்

சிவசங்கரனின் வின்விண்ட் ஒய் நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 2014ஆம் ஆண்டு ஐடிபிஐ வங்கியில் 530 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தற்போது வட்டியுடன் 600 கோடியாக உயர்ந்துள்ளது. சிவசங்கரன் மீது குற்றசதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசங்கரனிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
CBI raid in Sivasankaran's sun shine company. CBI files case against sivasankaran 600 crore fradulent in IDBI Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X