For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆஜராக சி.பி.ஐ. திடீர் உத்தரவு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சர்ச்சைக்குரிய டெலிபோன் உரையாடல்கள் குறித்து விசாரிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை விசாரணைக்கு சி.பி.ஐ. அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தி.மு.க.வினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீதான வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென ஆ. ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புதிய வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

CBI summons Karunanidhi's close aid Shanmuganathan

இந்த வழக்கில் புதிய திருப்பமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெலிபோன் உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோருடன் முந்தைய திமுக ஆட்சியில் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாஃபர் சேட் பேசுவது இடம்பெற்றிருப்பதாகவும் பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.

மேலும் கனிமொழியுடன் 2010-ஆம் ஆண்டு நவம்பர் 23; 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 16; சரத்குமாருடன் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 13; கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஜாஃபர் சேட் பேசியதாகவும் இவை அனைத்துமே ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கான ஆதாரமே என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த டெலிபோன் உரையாடல்களை ஒட்டுமொத்தமாக பொய் என்று அப்போதே தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்திருந்தார்.

அதே நேரத்தில் சி.பி.ஐயும் விசாரணை நீதிமன்றத்தில் இந்த டெலிபோன் உரையாடல்களை குறிப்பிட்டு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் சர்ச்சைக்குரிய இந்த டெலிபோன் உரையாடல் குறித்து விசாரிப்பதற்காக சண்முகநாதனை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆஜராக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது தி.மு.க.வை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
CBI officials summon to DMK leader Karunanidhi's close aid Shanmuganathan on the 2g case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X