For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்திற்கு வரும் குடிகாரர்களே.. கேமராக்கள் கண்காணிக்கின்றன உஷார்!

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலத்தில் குற்றங்களை தடுக்க 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காகவே அங்கு வரும் குடிகாரர்கள் ஆடி போய் உள்ளனர்.

குற்றால சீசனை ஓட்டி அ்ஙகு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை டிஐஜி முருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. போதிய போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

CCTV cameras to watch drunakards in Courtallam

மெயின் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள போலீசாருக்கு புளோரசனட் ரெயின்கோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரில் குளித்து கொண்டிருப்பவர்கள் கூட போலீசாரை பார்க்க முடியும்.

மேலும் குற்றாலத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் மது அருந்துபவர்கள், பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள், திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் நடமாட்டம கண்காணிக்கப்படும்.

CCTV cameras to watch drunakards in Courtallam

மது அருந்தி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கும், மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தொடரும் சாரல்

இதற்கிடையே, குற்றாலம், தென்காசி, செங்கோ்ட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து சாரலும, வெயிலும், காற்றும் மாறி மாறி அடித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனறு அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
CCTV camereas have been installed in Courtallam to watch drunkards and criminals, said DIG Murugan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X