For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”பீத்தோவன்”- சிம்பொனி மேதையின் 245வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள் டூடுள்!

Google Oneindia Tamil News

சென்னை: புகழ்பெற்ற இசைமேதையான பீத்தோவனின் 245வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் அழகான டூடுள் ஒன்றினை வெளியிட்டு அவரை கவுரவப் படுத்தியுள்ளது.

1770 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த பீத்தோவன், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைகருவிகளை இசைப்பதில் தேர்ந்த கலைஞராக திகழ்ந்தார்.

இவரின் சிம்பொனி இசையில் 5 ஆவது மற்றும் 9 ஆவது பீட்கள் மிகவும் புகழ் பெற்றதாகும்.

கேட்கும் திறன் இல்லை:

கேட்கும் திறன் இல்லை:

ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத பீத்தோவனுக்கு, தனது 26 ஆவது வயதில் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. இதனால், மன வருந்தியுள்ளார் பீத்தோவன்

புகழ்பெற்ற இசை:

புகழ்பெற்ற இசை:

எனினும், புகழ்பெற்ற இசைப்படைப்புகள் பெரும்பாலும் கேட்கும் திறன் குறைந்த பிறகு தான் பீத்தோவன் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

போராடி வென்ற தேசம்:

போராடி வென்ற தேசம்:

இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து கிடந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5 ஆவது சிம்பொனியின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒலிபரப்பியதாக கூறப்படுகிறது. இதனால், துவண்ட தேசம் நிமிர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளது.

400 கையேடுகள்:

400 கையேடுகள்:

காது கேட்காமல் போனதால் தாள்களில் எழுதி உரையாடியுள்ளார் பீத்தோவன். மற்றவர்கள் சொல்ல விரும்புவதை இவரது உரையாடல் டைரியில் எழுதுவார்கள். அதற்கு இவர் சைகை அல்லது எழுத்து மூலம் பதிலளிப்பார். அவ்வாறு 400 கையேடுகளை பீத்தோவன் வைத்திருந்திருக்கிறார்.

57 வயதில் மரணம்:

57 வயதில் மரணம்:

தனது 57 ஆவது வயதில், பீத்தோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.பீத்தோவனின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தில் உலகம் போற்றும் இசை கோர்வைகள் நூற்றாண்டுகளை கடந்தும் நினைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
ven when you’re the preeminent musical genius of your generation, sometimes you just step in it. So begins Beethoven’s trip to the symphony hall in today’s musical puzzle, which Leon Hong created in collaboration with artist Nate Swinehart and engineers Jonathan Shneier and Jordan Thompson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X