For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன 30-ம் ஆண்டு விழா.. எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த்- வீடியோ

    சென்னை: டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் எம்ஜிஆர் சிலை நடிகர் ரஜின்காந்த் திறந்து வைத்தார்.

    சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை டாக்டர் எம்ஜிஆர் பல்கலை.யின் 30-வது ஆண்டு விழா மற்றும் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியின் 33-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    Celebrations of Unveiling of Dr. M.G.R. Statue and 30th Year of University

    இந்த நிகழ்வுகளுக்கு பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஏ.சி. சண்முகம் தலைமை வகித்தார். பல்கலைக் கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்வில் எம்ஜிஆர் வெண்கல சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இத்கில் மொரிஷீயஸ் துணை அதிபர் பரமசிவபிள்ளை வையாபுரி, இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

    மேலும் எம்ஜிஆர் ஆட்சிக் கால மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், எம்ஜிஆருடன் இணைந்து நடித்த திரை நட்சத்திரங்கள், எம்ஜிஆர் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது.

    English summary
    Celebrations of unveiling of Bharat Rathna Dr. M.G.R.’s Bronze Statue, 30th Anniversary of our Deemed to be University and 33rd Anniversary of Thai Moogambigai Polytechnic College were celebrated with pomp and show at A.C.S. Medical College and Hospital campus, Velappanchavadi, Chennai on Monday 05.03.2018 at 4.00 p.m.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X