For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்தவர்கள்... விபரம் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்த குழந்தைகளின் விபரங்களை தெரிவிக்க பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஆங்கில வழி கல்விக்கு அதிக வரவேற்பு உள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இ்ணையாக ஆங்கில கல்வி அளிக்கும் வகையில் 6ம்வகுப்பில் ஆங்கில வழி கல்வி பிரிவு கடந்த 2014-2015ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Census on English medium admission

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 2698 அரசு உயர்நிலை, மேல்நிலைபபள்ளிகளில் 6ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் 6ம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவில் 165 உயர் நிலைப்பள்ளிகளும், 2014-2015ல் 1495 அரசு உயர்நிலை, மேனிலை பள்ளிகளிலும் 6ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் 6ம் வகுபபு ஆங்கில வழி கல்வி துவங்கலாம். நடப்பு ஆண்டில் ஆங்கில வழி கல்வி பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட மாணவர்களின எண்ணிக்கை ஆகியவற்றை ஜூன் 30ம தேதிக்குள் அனுப்பி வைக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Education department orders officials to take census on the number of students admitted in English medium in government schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X