For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

563 மீன்வர்கள் படுகொலை... தமிழர் என்றாலே மத்திய அரசு பாரபட்சமாக பார்க்கிறது.... முத்தரசன் பாய்ச்சல்

தமிழர் பிரச்சனைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

ராமநாதபுரம் : தமிழர் பிரச்சனைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

 Central acts discriminating in Tamilians issues, said Mutharasan

மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து வருகின்றனர். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இப்போராட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழர் பிரச்சனைகள் என்றாலே மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும். இலங்கை கடற்படையினரால் இதுவரை 563 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

English summary
Central Goverment acts dicriminating in Tamilians issues, said CPI State secretary Mutharasan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X