For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயல் பற்றி ஆய்வு முடிந்தது.. மத்திய குழு அறிக்கை சமர்பிப்பு

ஓகி புயல் பற்றி நடந்த ஆய்வு குறித்து மத்திய குழு அறிக்கை சமர்பித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஓகி புயல் பற்றி நடந்த ஆய்வு குறித்து மத்திய குழு அறிக்கை சமர்பித்து இருக்கிறது. சஞ்சீவ்குமார் ஜிண்டால் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

தமிழகத்தை சென்ற மாதம் ஓகி புயல் மிகவும் மோசமாக தாக்கியது. கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது.

Central Committee submits report on Ockhi after effects

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது. இதில் தமிழகத்திற்கு 280 கோடி வழங்கப்படும்.

இந்த நிலையில் ஓகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது. சஞ்சீவ்குமார் ஜிண்டால் தலைமையிலான குழு குமரி, சென்னை, தூத்துக்குடி, கடலூர் போன்ற பகுதிகளில் தங்கள் ஆயவை செய்தது.

தற்போது இந்த ஆய்வு முழுவதுமாக முடிந்து இருக்கிறது. இந்த ஆய்வு குறித்து மத்திய குழு அறிக்கை சமர்பித்து இருக்கிறது.

இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அறிக்கை மீது உள்துறை அமைச்சர் முடிவெடுப்பார்

இதன் பின் தமிழகத்திற்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட நிவாரண நிதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முதலில் போதுமான அளவு நிவாரண நிதி கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Central Committee submits report on Ockhi after effects. This committee has headed by Sanjeev Kumar Jindal. They have submitted their report to home department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X