For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறும் பாஜகவினர்.. தமிழக அரசை கலைக்க மத்திய அரசு ரெடியா? தினகரன் சவால்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கக் காரணமான எடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

குற்றாலம்: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லும் மத்திய அரசு, எடப்பாடி தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் குற்றாலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Central Government to Dissolve TN Government says TTV Dhinakaran

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்குக் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு முன்வருமா ?

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அதற்கு எதிர்ப்பு அதிகரிப்பது நல்ல விஷயமல்ல. இதுகுறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Central Government to Dissolve TN Government says TTV Dhinakaran. AMMK Deputy General Secretary TTV Dhinakaran says that, Law and Order problem is getting high.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X