For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசின் ஒரு நாடகம் தான்!

காவிரி விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசின் ஒரு நாடகம் தான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    சென்னை : காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் , திட்ட வரைவு சமர்பிக்கப்பட்ட நிலையில், இதுவும் மத்திய அரசின் ஒரு நாடகமாக இருக்கும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், திட்ட வரைவு அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 4 மாநிலங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு மே 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்கவும் மத்திய அரசு தயார் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

     மத்திய அரசின் திட்டம்

    மத்திய அரசின் திட்டம்

    காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. மத்திய அரசுக்கு உதவுவதன் மூலம் தன்னுடைய மாண்பை உச்சநீதிமன்றம் குறைத்துக்கொண்டுள்ளது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், இதுவும் மத்திய அரசின் நாடகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     கர்நாடகத் தேர்தலே காரணம்

    கர்நாடகத் தேர்தலே காரணம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது. கர்நாடகத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசு, அதே போல் காவிரி திட்டத்திலும் எதோ ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

     பொய் சொன்ன அரசு

    பொய் சொன்ன அரசு

    மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொய் சொன்ன மத்திய அரசின் உண்மை இன்று வெளியே வந்துள்ளது. இதுவரை, அமைச்சர்கள் கூட்டம் எதுவும் நடத்தப்படாத நிலையில், இன்று மட்டும் அறிக்கையை எப்படி தாக்கல் செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

     அதிகாரம் இல்லாத அமைப்பு

    அதிகாரம் இல்லாத அமைப்பு

    விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் எதோ பெயருக்கு நிர்வாகிகளை நிரப்பி, அதிகாரம் இல்லாத அமைப்பயே நிறுவ மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எங்களுக்கு, தண்ணீரை அணையில் இருந்து நேரடியாக திறந்துவிடும் அமைப்பு தான் எங்களுக்கு முக்கியம். மேலும் மே 16ம் தேதி வழக்கை ஒத்தி வைத்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Central Government is planning something on Cauvery says Duraimurugan. Cauvery Draft plan submitted on Supreme Court, and the Case was adjourned on May 16th.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X