நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

Central govt did not take any decision on NEET exam: Thirumavalavan

வழக்கை விசாரித்த ஹைகோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல்முறையீட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மாநில அரசை முடக்கி வைப்பது ஜனநாயக விரோதமானது என்றும் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதன் பின்னணி பற்றி விளக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK leader Thirumavalavan said that Central govt did not take any decision on NEET exam. Freezing a state govt is against democracy he said.
Please Wait while comments are loading...