For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய குழுவின் முதல் நாள் விசிட்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர் நேற்று முதலில் தாம்பரம் பகுதியில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தங்களை முழுமையாக சந்திக்கவில்லை. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Central teadm's first day visit

நேற்றைய முதல் நாள் விசிட் குறித்த ஒரு பார்வை...

  • மாலை 3 மணிக்கு ஆய்வு பணிகளை மத்திய குழு தொடங்கியது.
  • தாம்பரம் தாலுகா அலுவலகம் சென்ற குழுவினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வரவேற்பு அளித்தார்.
  • அதன் பின்னர் மேற்கு தாம்பரம் சேவாசதன் பள்ளி முகாமில் தங்கியிருந்தவர்களை மத்திய குழுவினர் சந்தித்து, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
  • அடுத்து மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலை, பாப்பன் கால்வாய், அடையாறு ஆற்று பகுதிகளை பார்வையிட்டனர்.
  • தாம்பரம் சிடிஓ காலனி பகுதிக்கு சென்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக 6 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
  • இதையடுத்து தாம்பரம் வேளச்சேரி சாலை பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர் சேலையூர் பகுதிகளில் பழுதான சாலைகளை ஆய்வு செய்தனர்.
  • ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உடைந்த பகுதிக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
  • பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்த பகுதிகளை பார்த்தனர். ஏரி உடைந்த இடத்தில் மணல் மூட்டை அடுக்கி வைத்து இருந்த பகுதிக்கே சென்று மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
  • வேளச்சேரி ரயில் நிலையம் முன் பகுதியில் உள்ள உயரமான பாலத்தில் இருந்தபடி, வேளச்சேரி ராம்நகர் பகுதியை பார்வையிட்டனர்.
  • பின்னர் கீழே வந்து பாலத்தின் கீழே திரண்டிருந்த மக்களிடம் பேசினர்.
  • இரவு 7 மணிக்க முதல் கட்ட ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு மத்திய குழு ஹோட்டலுக்குத் திரும்பியது.
English summary
Here is the report on Central teadm's first day visit to the flood hit areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X