மத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை.. சட்டசபையில் சீறிய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை பெறுவதற்காக தான் மத்திய அரசிடம் இணக்கமாக உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மேற்பார்வையில் தமிழக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களையும், நிதியையும் பெறுவதற்காக தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். மக்களின் நலனை சார்ந்த இந்த அரசு எப்போதும் அவர்களின் நலனுக்காகவே இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவின் பினாமி அரசு, அதிமுக பாஜக கிளை கட்சியாக செயல்படுகிறது என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பல நாட்களாக முன்வைத்து வந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி இந்த விளக்கத்தை சட்டசபையில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.