For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்பி, எம்எல்ஏக்களுக்கு அள்ளிக்கோ... மூத்த குடிமக்களுக்கு குறைச்சுக்கோ... ரயில்வே பகீர் திட்டம்

எம்பி, எம்எல்ஏக்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுக்கும் மத்திய அரசு மூத்த குடிமக்களின் கட்டண சலுகையை விட்டுக் கொடுக்க மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று கசிந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வ

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: மானிய விலை சிலிண்டர் சேவையை வசதியானவர்கள் விட்டுக்கொடுக்க அரசு கோரியது போல், ரயில் பயணங்களில் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் கட்டணச் சலுகைகளை விட்டுக்கொடுக்குமாறு, விரைவில் மத்திய அரசு கோரிக்கைவிட உள்ளது. முதியவர்கள் மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அரசு கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு பலதரப்பினரிடையேயும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் ஆண்களுக்கு 40% பெண்களுக்கு 50% சலுகை அளிக்கப்படுகிறது. இதனால் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு ரூ1,300 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தொடங்கி, இலவச பயணம் மேற்கொள்ளும் வரை சலுகை உள்ளது. இந்த சலுகைகளில் மாற்றத்தை கொண்டுவரலாம் என்ற யோசனையை ரயில்வே அமைச்சகத்திடம் மத்தியரசு கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மத்திய அரசு இதுபோன்ற ஒரு கோரிக்கையை பரிசீலித்து, கட்டண சலுகைகளை திரும்ப பெருமானால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு மிக அதிகஅளவிலான சலுகைகளை மத்திய மாநிலஅரசுகள் வாரி வழங்குகின்றன. போன் சலுகை, கேஸ் சலுகை, பயணப்படி உள்பட, ஆனால் முதியவர்களின் நலனில் அக்கரையின்றி சலுகை ரத்து போன்ற முடிவை எடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் மூத்தகுடிமக்கள் நல செயல்பாட்டாளர்கள்.

 அள்ளிக் கொடுக்கும் சலுகைகள்

அள்ளிக் கொடுக்கும் சலுகைகள்

தற்போதைக்கு, அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு வானளாவிய சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் முழுக்க முழுக்க இலவசம். எத்தனை வாட்டி வேண்டுமானாலும் அவர்கள் ரயிலில் போயக் கொள்ளலாம். அதேபோல், எம்.எல்.ஏக்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏ.சி., இரண்டாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் தனியாகவும் வழங்கப்படுகிறது.

 விஐபி சலுகை

விஐபி சலுகை

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தங்களுக்கான வி.ஐ.பி., கோட்டாவில் சிறப்பு மற்றும் சுவிதா ரயில்களில் இலவசமாக பயணிக்கும் சலுகை வழங்கப்படாமல் இருந்தது. முழுமையான கட்டணத்தை செலுத்தி பயணித்து வந்தனர். ஆனால், அண்மையில் சுவிதா ரயில்களிலும் இலவசமாக பயணிக்கும் அனுமதியை மத்தியரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

 இவர்களால் இழப்பு இல்லையா?

இவர்களால் இழப்பு இல்லையா?

அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ரயில் பயணச்செலவை ஏற்பது யார் தெரியுமா? எம்.பி.,க்களின் பயண கட்டணத்தை பார்லிமென்டும், எம்.எல்.ஏ.,க்களின் பயண கட்டணத்தை சம்பந்தப்பட்ட சட்டசபையும் செலுத்திவருகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால், ரயில்வேக்கு இழப்பு ஏற்படாது. ஆக, மக்கள் வரிப்பணத்தில்தான் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ரயில் பயணத்தை மேற்கொண்டுவருகிறார்கள்.

 அவப்பெயரில் இருந்து தப்புமா?

அவப்பெயரில் இருந்து தப்புமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இத்தனை சலுகைகளை கொடுக்கும் அரசுகள், ஏன் ஏழைகள், முதியவர்களின் சலுகைகளில் கை வைக்கப்பார்க்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வரும் பிற நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் சலுகையையும் பறிக்கும் நாடு என்ற அவப்பெயரை பெறுவதற்கு முன்னர் இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமா?

English summary
Activists shocked government move to abolish rail concession for senior citizens, specially-abled
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X