For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ

    சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    Chances for changing Atmospheric Low pressure Zone to Strom in next 12 hours says IMD

    இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    தற்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ., தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    English summary
    Chances for changing Atmospheric Low pressure Zone to Strom in next 12 hours says IMD.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X