• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஐடி ரெய்டில் சிக்கிய துணைவேந்தர் கீதாலட்சுமியை டிஸ்மிஸ் செய்ய கோரி ஆளுநரிடம் மனு!

By Lakshmi Priya
|

சென்னை: வருமான வரித்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குட்பட்ட டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமியை பதவியிலிருந்து நீக்கக் கோரி ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. உயர் நீதிமன்றம் கடிந்து கொண்ட பிறகு, நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜரான கீதாலட்சுமியிடம் துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனால் வசமாக சிக்கியுள்ள அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநரும், செயல்பாட்டாளருமான நாராயணன் மனு அனுப்பியுள்ளார்.

நகல் இணைப்பு

நகல் இணைப்பு

ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

மனுவின் விவரம்

மனுவின் விவரம்

தமிழக அரசுப்பல்கலைக்கழகங்களின் 10 துணை வேந்தர்கள்/ பதிவாளர்கள் ஆகியோரின் தவறான செயல்பாடு குறித்து, 22-12-2016 அன்று, கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் இணைந்து, தங்களுக்கு மனு அனுப்பியிருந்தோம். இந்தத் துணை வேந்தர்கள், கீதாலட்சுமி தலைமையில், (இப்பொழுது சிறையில்அடைக்கப்பட்டுள்ள) வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து, தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டினர். அவர்களது செயல்பாடுகள் குறித்து வேந்தர் அவர்கள் விளக்கம் கேட்டுப்பெற்றதாக ஊடகங்களில்செய்தி வந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாகஅவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

 30 மணி நேரம் சோதனை

30 மணி நேரம் சோதனை

கடந்தவாரம், துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டினை, வருமானத்துறையினர், 30 மணிநேரம் சோதனைக்கு உட்படுத்தியதாக செய்திவந்தது. வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.வருமானத்துறையினர், இப்பொழுது அவரைதொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

 நேர்மை வேண்டும்

நேர்மை வேண்டும்

பலகலைக்கழக மானியக்குழுவின் 13-06- 2013 தேதியிட்ட அறிவிக்கையின் பிரிவு 7.3.0(i), ‘தகுதி, நேர்மை, நாணயம், நிறுவனஅர்ப்பணிப்பு ஆகியவை கொண்டவர்களே, துணைவேந்தர்களாக நியமிக்கப்படவேண்டும்' என்கிறது. 1964-66-ம் ஆண்டு,கோத்தாரி குழுவானது 'சமூகத்தின் எல்லாப் பிரிவினரின் நன்மதிப்பைப்பெற்றவராக துணை வேந்தர் இருக்கவேண்டும், உயர்ந்த விழுமியங்கள்,நிர்வாகத்திறமை, கல்விப்புலமைஆகியவற்றின் அடிப்படையில் வழிநடத்தவேண்டும்' என்கிறது. 1993ல் நியமிக்கப்பட்டபாரிக் குழுவும் ‘பதவியின் உயர் தகுதியைக்கருத்தில் கொண்டு, துணைவேந்தர்கள்,கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும்' என்கிறது. 1992ல்,ஞானம் குழுவும், துணைவேந்தர்களுக்குத் தேவையான, நேர்மை, கண்ணியம்,ஒழுக்கத்தரம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

 பதவிக்கு களங்கம்

பதவிக்கு களங்கம்

மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளை, இதற்குமுன்பு டாக்டர்.கீதாலட்சுமி வகித்து வந்தபோதும், சர்ச்சைக்கு உள்ளானார். 2015 டிசம்பரில், துணைவேந்தர் பதவிஅவருக்கு அளிக்கப்பட்டபோது, தகுதியின்அடிப்படையில் இல்லாமல், அரசியல்தொடர்பின் காரணமாக அவர் பதவிக்குவந்தார் என்று புகார் எழுந்தது. அதுஉண்மையாக இருக்கக்கூடும் என்பது,அரசியல் உட்பட அவரது சமீபத்திய நடவடிக்கைகள் உறுதிப் படுத்துகின்றன. டாக்டர் கீதாலட்சுமி வீட்டில் வருமானவரித்துறை சோதனை மற்றும் தொடர் விசாரணை ஆகிய அசாதாரண சூழல் காரணமாக, இனியும் அவர்பதவியில் தொடர்வது, விழுமியங்களின் அடிப்படையில் சாத்தியமில்லாதது. துணைவேந்தர் எனும் உயரிய பதவிக்கு மேலும் களங்கம் ஏற்படுவதற்கு முன், அவர்உடனடியாகப் பதவி விலகும் வகையில்,ஆளுனர் நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம். புகழ்பெற்ற மருத்துப்பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்நியமிக்கும் பொருட்டு, புதிய தேடுதல் குழுவை உருவாக்க வேண்டும். .

 எங்கும் காணாத நடைமுறை

எங்கும் காணாத நடைமுறை

தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங்களுக்கு,துணைவேந்தர்கள் இல்லை. 8 பல்கலைக் கழகங்களுக்கு, பதிவாளரும், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரியும் இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வரால் தொடங்கப்பட்ட நாகைமீன்வளப் பலகலைக்கழகத்தில், சட்டத்துக்குப் புறம்பான அரசாணையின்அடிப்படையில், பொறுப்பு பதிவாளரே, பலமாதங்களாக பொறுப்பு துணைவேந்தராகவும்செயல்பட்டு வருகிறார். பதிவாளர் அறையில்இருந்து, அவரே திட்டம் உருவாக்கி கோப்புகளை கையெழுத்திட்டு துணைவேந்தர்அறைக்கு அனுப்புகிறார். பின்னர்,துணைவேந்தர் அறையில்உட்கார்ந்து கொண்டு, அவரே அவற்றிற்கு ஒப்புதல் அளிக்கிறார். எந்த ஒருபல்கலைக்கழக வரலாற்றிலும், இப்படிப்பட்ட வெளிப்படையான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. கருத்துத்திருட்டு,நேர்மையின்மை போன்றவை தமிழகப் பல்கலைக்கழகங்களில் விதிவிலக்காக இல்லாமல், இயல்பான நடவடிக்கைகள் ஆகிவிட்டன. நீதிமன்றங்களை அணுகியும்,தீவிரமடையும் கேடுகளைத்தடுக்க முடியவில்லை.

 கேலிக்கூத்து நாடகம்

கேலிக்கூத்து நாடகம்

துணைவேந்தர் தேடுதல் என்பது,முடிவில்லாத கேலிக்கூத்து நாடகமாகிவிட்டது. இனி, சில நாட்களில், துணைவேந்தர்பதவிகள் அறிவிக்கப்பட்டாலும், அவை, அதிக ஏலம் அடிப்படையில் இல்லாமல், தகுதி அடிப்படையில்தான் முடிவுசெய்யப்பட்டன என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், பல தேடுதல் குழுக்களின் நியமனங்களே, தகுதியின் அடைப்படையில்அமையாமல், சர்ச்சைக்கு உரியவனவாக உள்ளன என்பதுதான் உண்மை.

 அவசர நடவடிக்கை தேவை

அவசர நடவடிக்கை தேவை

நிறுவனமயமாக்கப்பட்ட ஊழல், சிபாரிசு,அரசியல்மயம், தகுதியின்மை, ஒழுக்கக் கேடுபோன்றவை, இப்பல்கலைக்கழகங்களுக்குள்நுழையும் இளைய மாணவர்களுக்குச்செய்யும் மிகக்கொடுமையான துரோகமாகும்.கனவுகளுடன் உள்நுழையும் அவர்கள்,ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்து வதங்கிவிடுவார்கள். மாண்புமிகு ஆளுனர்-வேந்தர்அவர்கள், இனியாவது, அவசர நடவடிக்கைகள்மூலம், நம்பிக்கையற்ற தரைதட்டாதஆழத்திற்குள், தமிழகஅரசுப்பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக மூழ்கி விடுவதற்கு முன் காத்திட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Income tax raid in MGR Medical University VC GeethaLakshmi. Change India movement sent memorandam, to Governor to dismiss her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X