For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் பற்றி படிச்சா மட்டும் போதாது பாஸ்.. சச்சின் கூறும் அட்வைஸைப் பாருங்க!

வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை மாணவர்கள் கற்க வேண்டும் என சச்சின் கேட்டு கொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கல்பட்டில் சச்சின் கிரிக்கெட் பற்றி அட்வைஸ்-வீடியோ

    செங்கல்பட்டு: வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வருகிறது பி.எம்.டபுள்யூ. கார் தொழிற்சாலை. தனியார் நிறுவனமான இதன் 11-வது ஆண்டு விழா பி.எம்.டபுள்யூ. குரூப்பின் இந்திய தலைவர் விக்ரம் பாவா தலைமையில் இன்று நடைபெற்றது.

    check video and image in angle whatsapp

    இதில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் ஜாம்பவான் என போற்றப்படும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் அண்ணா யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் மாணவர்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பங்கேற்கும் 'ஸ்கில் நெக்ஸ்ட்' என்னும் ஒரு தொழில்நுட்ப திறனளிப்பு முன் முயற்சியை அறிமுகம் செய்து வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி, காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மாணவர்கள் இணைந்து இங்கு உற்பத்தி செய்யப்படும் BMW - X3 -மாடல் கார்க்கான டுவின்பவர் டர்போ இன்லைன் மற்றும் ஸ்பீடு ஸ்டெப்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை அசெம்பிள் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஸ்கில் நெக்ஸ்ட் போன்ற முன்முயற்சிகள் நமது நாட்டின் ஆட்டோமோட்டிவ் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

    ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப மாணவர்களுக்கு BMW இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனில் நேரடிப் பயிற்சியை பெறுவதற்கானதொரு சிறந்த வாய்ப்பாக இது திகழ்வதாகவும், கிரிக்கெட்டைப்பற்றி படித்திருந்தால் மட்டும் விளையாடிருக்க முடியாது எனவும, விளையாட்டில் மேற்கொண்ட நேரடி பயிற்சிகளே தமக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல் ஸ்கில் நெக்ஸ்ட் மாணவர்கள் நேரடி செயல்முறை அனுபவத்தின் வழியாக ஆட்டோமோட்டிவ் தொழில் நுட்பத்தை புரிந்து கொள்வதை சுலபமானதாக மாற்றும் என்பதால் வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    English summary
    The 11th Anniversary of the private company, BMW The event was held today under the leadership of the Indian leader Vikram Bhava. Former Indian cricketer Sachin Tendulkar is a special guest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X