For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் நடந்த விபத்துக்களில் 64 பேர் காயம்

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் சிக்கி 64 பேர் காயமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. புதிய ஆண்டை மக்கள் புத்துணர்ச்சியுடன் தொடங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai : 64 persons injured in different accident

சென்னையின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவு முதல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணி, எம்.ஆர்.சி நகர் பகுதிகளில் புத்தாண்டுதினத்தை முன்னிட்டு நடந்த பேக் ரேசில் இருவர் படுகாயமடைந்தனர்.

இதேபோல், நகரின் பல்வேறு பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற பைக் ரேசில் கலந்து கொண்டவர்களால் ஏற்பட்ட விபத்தில் 64 பேர் காயமைடைந்ததாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்சுக்களும், 15க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In Chennai, 64 persons were injured in different accidents that happened on new year celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X