For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராவோடு ராவாக இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் கமிஷனர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தலைமை ஆணையர் இரவோடு இரவாக அதிரடியாக இடமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலைய சுங்கத்துறை தலைமை ஆணையராக ரமேஷ் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு அதிரடியாக டெல்லிக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில் சென்னை துறைமுகத்தில் முதன்மை சுங்கத்துறை ஆணையராக இருந்த தாஸ் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் இரவோடு இரவாக புதிய பொறுப்பை ஏற்றார்.

Chennai airport customs saw tragic change in night

ரமேஷ் திடீர் இட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சென்னை விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் கடத்தல் தங்கத்தை கைப்பற்றும் பணியில் சுங்கத்துறை அலட்சியமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரமேஷ் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தல் தங்கம் மற்றும் பொருட்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்தான் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக விமான நிலையம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Chennai customs commisioner chnaged suddenly in the night itself, new one apointed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X