For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடிக்கப்பட்ட சென்னை தொழிலதிபர் வீடு.. 60 சாமி சிலைகள் சிக்கின!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை தொழிலதிபர் வீடு.. 60 சாமி சிலைகள் சிக்கின!- வீடியோ

    சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டை இடித்து நடத்தப்பட்ட சோதனையின்போது அவரது வீட்டில் காட்சிப்படுத்தப்பட்ட 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு படத்தில் நடித்தவர். இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பழங்கால கற்சிலைகள் இருப்பது தொடர்பாக சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளன் தெரிவித்தார்.

    4 ஐம்பொன் சிலைகள்

    4 ஐம்பொன் சிலைகள்

    இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று இவரது வீட்டின் ஒரு பகுதியை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்பட 60 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை தோட்டம் மற்றும் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை. எனினும் தோண்டியெடுத்த இடத்திலிருந்து சிலைகள் எடுக்கப்படவில்லை.

    லாரி வரவழைக்கப்பட்டுள்ளது

    லாரி வரவழைக்கப்பட்டுள்ளது

    இந்த சிலைகளுக்கு முறையான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து போலீஸார் 60 சிலைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை கொண்டு செல்ல லாரி வரவழைக்கப்பட்டுள்ளன.

    பழமைவாய்ந்தவை

    பழமைவாய்ந்தவை

    இவை அனைத்து சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சிலைகள் அனைத்து பல்வேறு கோயில்களை சேர்ந்தவை என்றும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தவை என்றும் கூறப்படுகிறது.

    உரிய ஆவணங்கள்

    உரிய ஆவணங்கள்

    இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2016-ஆம் ஆண்டு கோட்டூர்புரம் போலீஸாரின் உதவியுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அவர் வீட்டைச் சுற்றி பழங்கால் கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai businessman's house demolished in connection with Statue smuggling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X