For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த மாதிரி அசம்பாவிதம் ஏதும் நடக்காது.. மக்கள் பீதியடைய வேண்டாம்.. சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Chennai city corporation commissioner Karthikeyan requesting people to do not panic

இந்நிலையில் சென்னை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஏற்பட்டதை போன்ற பெரும் வெள்ளம் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதனிடையே பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது என்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதம் போல், தற்போது எதுவும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மழை நின்ற 3 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பி விடும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர், துறைமுகம், கோட்டூர்புரம், அடையாறு மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai city corporation commissioner Karthikeyan requesting people to do not panic. He said that there will be no such thing as the year 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X