For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சுங்கத்துறை அலுவலக இணையதளத்தை முடக்கிய பாக். தீவிரவாதிகள்... சேவைகள் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை : சுங்கத்துறை அலுவலக இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, சேவைகள் பாதிக்கப்பட்டன.

Pak Cyber Attacker Security என்ற பெயரிலான குழு சென்னை சுங்கத்துறை அலுவலக பக்கத்தை முடக்கியுள்ளது. ஆனால், அது பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

chennai customs office

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகம் முடக்கப்பட்ட இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் தீவிரவாதிகளால் ஹேக் செய்து முடக்கப்பட்டது. இதனால் உலக அளவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் இணையதள சேவையும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்திய அரசு துறைகளுக்கு சொந்தமான இணையதளங்களை முடக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சில தீவிரவாதிகள் இன்று சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இணையதளத்தை முடக்கியுள்ளனர்.

English summary
Chennai customs office website hacked by Pakistanis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X