For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை டி.எல்.எஃப். ஐடி வளாகத்தில் வெள்ளத்தில் சிக்கி ஊழியர்கள் பலி?.. 10,000 பேர் பரிதவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராமாவரத்தில் உள்ள டி.எல்.எஃப். வளாகத்தில் வெள்ளம் வடியாத நிலையில் மின் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஐ.டி நிறுவனங்களுக்கு நுழைய ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கும் போரூர் சிக்னலுக்கும் நடுவே அமைந்திருக்கிறது டி.எல்.எஃப். ஐ.டி. பார்க். புறநகரில் பெய்து முடித்த மழையின் பெரும்பகுதி, டி.எல்.எஃப்.பின் சரிபாதியை மூழ்கடித்துள்ளது. டி.எல்.எஃப் வளாகத்தில் 160 ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது; 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

கடந்த நவம்பர் 30ம் தேதியும் டிசம்பர் 1ம் தேதியும் பெய்த கனமழையும், அடையாறு ஆற்றின் வெள்ளநீரும் கீழ் தளங்களை மூழ்கடித்துள்ளது. வளாகத்தில் 3 அடித்தளங்களை மழை நீர் மூடியுள்ளதால் நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 தளத்திலும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மழை வெள்ளம் புகுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

ஊழியர்களின் கதி என்ன?

ஊழியர்களின் கதி என்ன?

அங்குள்ள 7 மாடியிலும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வரையில் பாதுகாப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று தரைத் தளங்களில் (பேஸ் மெண்ட்) சில துணை நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இந்த வளாகத்துக்குள் என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. புஃட் கோர்ட், கேன்டீன், நூற்றுக்கணக்கான கால் சென்டர்கள் என்று தரை தளத்தில் இயங்குகின்றன. ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் இருந்தவர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.

11நாட்களாக திறக்காத டி.எல்.எஃப்

கடந்த திங்கட்கிழமை நவம்பர் 30ம்தேதி மாலை முதல் இந்த வளாகம் மூடப்பட்டுள்ளது. இன்றோடு அந்த வளாகம் பூட்டப்பட்டு 11வது நாட்கள் ஆகிவிட்டது. டி.எல்.எஃப். ஐ.டி வளாகம் அமைந்திருக்கும் இடத்துக்கும் மெயின் ரோட்டுக்கும் இடையில் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. சாலையில் ஓடிய வெள்ளநீர் மளமளவௌ தரை தளத்தில் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும் அந்த வளாகத்தின் பக்கம் யாரும் போகவில்லை.

துரத்தப்படும் அவலம்

துரத்தப்படும் அவலம்

மழை நின்றுத்தால் பணிக்கு செல்ல விரும்புவர்களை இருபதுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் முரட்டுத்தனமாக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இது ஒரு இனம்புரியாத அச்சத்தை ஊழியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. வளாகத்தில் நடந்ததை வெளிப்படையாக தெரிவிக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிக்குவருவோர் தொடர்ந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூழ்கடித்த வெள்ளம்

மூழ்கடித்த வெள்ளம்

வளாகத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் நூற்றுக்கணக்கில் லாரிகளும், நீரை உறிஞ்சித் தள்ளும் மோட்டார் வாகனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக நீரை வெளியேற்றும் பணியில் இத்தனை கருவிகள், லாரிகள், மனிதர்கள் ஈடுபட்டிருந்தும் அங்குள்ள மூன்று பேஸ் மெண்ட்டுகளின் தலைப் பகுதி இன்னும் வெளியே தெரியவில்லை.

எத்தனை உயிர்கள் பலி?

எத்தனை உயிர்கள் பலி?

டி.எல்.எப் வளாகத்திற்குள் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளனவோ என்பது பற்றி உறுதியான எந்த தகவலையும் சொல்ல ஆளில்லை. வெள்ள சேதங்கள் நிகழ்ந்த பின் தேவையற்ற பல அடுக்கு பாதுகாப்பு, ஏகப்பட்ட தடுப்பு வேலிகள். டி.எல்.எஃப். ஐடி வளாகத்தில் என்னதான் நடக்கிறது என்பது மர்மமாவே உள்ளது.

English summary
Chennai Ramapuram DLF IT park affected heavy flood. IT workers not allowed in the DLF gardern city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X