For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாஸுக்கு ஜாமீன் கிடைக்குமா.. விசாரணை ஒத்திவைப்பு.. நாளை உத்தரவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்கக் கூடாது-அனுசுயா டெய்ஸி மனு-வீடியோ

    சென்னை: காவல் துறை மற்றும் முதல்வருக்கு எதிராக அவதூறு பேசி வேலூர் சிறையில் உள்ள எம்எல்ஏ கருணாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    Chennai Egmore court to hear Karunass Bail plea

    அப்போது அவர் முதல்வரே தான் அடித்து விடுவதாக பயப்படுவதாக கூறிய கருணாஸ், திநகர் போலீஸ் டிசி அரவிந்தனை மிரட்டி நேருக்கு நேர் மோதி பார்க்கும் படி சவால் விடுத்தார்.

    மேலும் அவரது கை கால்களை உடைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் கருணாஸ். மேலும் அவர் ஏதோ ஒரு சமூகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Chennai Egmore court to hear Karunass Bail plea

    இந்நிலையில் அவரது ஜாமீன் மனு சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதற்காக அவர் வேலூரிலிருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. கருணாஸை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நுங்கம்பாக்கம் போலீஸார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    [ கருணாஸை போலீஸ் காவலில் விட எழும்பூர் கோர்ட் மறுப்பு ]

    English summary
    Chennai Egmore Court to hear Karunas's bail plea shortly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X