For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னிய செலாவணி மோசடி.. பெங்களூர் சிறையிலுள்ள சுதாகரனுக்கு எழும்பூர் நீதிமன்றம் வாரண்ட்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனை ஆஜர்படுத்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரனை ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ., 'டிவி'க்காக, வெளிநாடுகளில் இருந்து, ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக, அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதுள்ளதாக சசிகலா, சுதாகரன், பாஸ்கரன்,தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்காக சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Chennai egmore court issues warrant to produce Sudhakaran in court

இந்த வழக்கில் தேவைப்பட்டால் சசிகலாவுடன் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு சுதாகரன் ஆஜராக உத்தரவிட்டும் அவரை ஆஜர்படுத்த பெங்களூர் சிறைத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு இந்த வழக்கில் சுதாகரனை நேரில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பத்தும் உத்தரவிட்டார்.

English summary
Chennai egmore court issues warrant to produce Sasikala's relative Sudhakaran who is imprisoned in jail for Jaya assets case for the hearing of JJ tv equipments fraud case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X