For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தவறுதலாக பெட்டி மாறி ஏறிய இளம்பெண்ணுக்கு பளார் – சென்னையில் டிடிஆர் அட்டகாசம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெண் ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் என்ற காரணத்திற்காக டிக்கெட் பரிசோதகர் அவரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் இளம் பெண் நிஜாய்ஸ் .

நேற்று முன்தினம், இவர் நுங்கம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறினார்.

Chennai electric train tragedy…

முதல் வகுப்பில் பயணம்:

2 ஆவது வகுப்பு டிக்கெட் அவர் கையில் இருந்தது.அவசரமாக ரயிலில் ஏறியதால் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார். மாம்பலத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி சோதனை செய்தார்.

டிக்கெட் பரிசோதகர் ஆவேசம்:

இளம் பெண் நிஜாய்ஸ் அவரிடம் இருந்த டிக்கெட்டை காட்டினார். அது 2 ஆவது வகுப்பு டிக்கெட் என்பதை அறிந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ஆவேசம் ஆனார். இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து ரயிலில் இருந்து கீழே இறங்கு என்றார்.

கன்னத்தில் பளார்:

‘‘அவசரத்தில் ஏறி விட்டேன் அபராதம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று அந்த பெண் கூறினார். ஆனால் ரயில் நின்றதும் அந்த பெண்ணை ரயில் பெட்டியில் இருந்து கீழே இழுத்தார். கன்னத்திலும் அறைந்தார்.

மீண்டும் அறை:

டிக்கெட் பரிசோதகர் அறைக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போதும் அறைந்தார். இதற்குள் அந்த பெண் தனது நண்பர்களை அழைத்தார்.

அவமானப் படுத்திய பரிசோதகர்:

‘‘கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருந்தும், மற்ற பயணிகள் முன்னிலையில் டிக்கெட் பரிசோதகர் தன்னை கிரிமினல் குற்றவாளி போல அடித்து அவமானப்படுத்தி விட்டார்'' என்று கூறினார்.

மன்னிப்பு கேட்ட அதிகாரி:

இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் இளம் பெண் நிஜாய்ஸ் புகார் மனு கொடுத்தார். மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். டிக்கெட் பரிசோதகர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து புகாரைத் திரும்ப பெற்றார் நிஜாய்ஸ்.

English summary
Lady ticket checker in Chennai train, beat a young lady for wrongly depart in a cabin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X