For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தர கோரி... சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஓகி புயல் வருவதை அறியாத மீனவர்கள் பலர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

Chennai Fishermen protest today at Chepauk

ஆனால் அவர்கள் இதுவரை திரும்பவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்களில் புயலில் சிக்கி தப்பி வந்த மீனவர்கள் அண்டைய மாநிலங்களில் அடைக்கலம் தேடி சென்றனர். பலர் தாங்களாக கரை திரும்பினர்.

இந்நிலையில் எஞ்சியுள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களின் நிலை தெரியாமல் குமரி மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டு சின்னத்துறையில் கரையில் காத்திருக்கின்றனர்.

குமரி மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தியபோது சென்னையில் போராட்டம் நடத்த மீனவர்கள் திரண்டனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி தரவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று சேப்பாக்கத்தில் சென்னை வாழ் கன்னியாகுமரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

English summary
Chennai Fishermen are going to protest today at Chepauk as the Kumari fishermen were missing in Ockhi cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X