For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. தேர்ச்சியில் சிங்காரச் சென்னை எந்த இடத்தில் இருக்கு பாருங்க!

பிளஸ் 2 தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதத்தில் சென்னைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்..கடைசி இடத்தில் விழுப்புரம்!- வீடியோ

    சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதத்தில் சென்னைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    97% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 96.3 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 96.18 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

    நாமக்கல் 5வது இடம்

    நாமக்கல் 5வது இடம்

    ராமநாதபுரம் 95.88 சதவீதம் தேர்ச்சி பெற்று 4 வது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 95.72 சதவீதம் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 95.60 சதவீதம் பெற்று 6 வது இடத்தில் உள்ளது.

    சென்னைக்கு 14வது இடம்

    சென்னைக்கு 14வது இடம்

    இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதத்தில் சென்னைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது. அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சென்னை மாநகர் முதல் 10 இடங்களுக்குள் கூட வரவில்லை.

    இந்த ஆண்டு அதிகரிப்பு

    இந்த ஆண்டு அதிகரிப்பு

    சென்னை மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 93.09 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு 92.9% இருந்த சென்னை தேர்ச்சி விகிதம்,இந்தாண்டு 93.09% ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி 24வது இடம்

    புதுச்சேரி 24வது இடம்

    பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் புதுச்சேரி 24வது இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 80.98 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    English summary
    Plus 2 exam result released on Internet. Chennai gets 14th place in the result percentage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X